பெட்டாலிங் ஜெயா, டாமன்சாராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஹெல்மெட்டால் (தலை கவசம்) கொண்டு அண்டை வீட்டாரை அடித்து கொன்றதாகக் கருதப்படும் நபரை போலீசார் இன்று கைது செய்தனர்.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறுகையில், நேற்று இரவு 9.15 மணிக்கு கிடைத்த புகாரின் பேரில் 26 வயதுடைய நபர் கோத்தா டாமன்சாரா பகுதியில் இன்று கைது செய்யப்பட்டார்.
மக்கள் தன்னார்வப் படையின் (RELA) உறுப்பினரான 45 வயதான பாதிக்கப்பட்டவர், மருத்துவப் பணியாளர்களால் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட நபர் இருவரும் லிப்டில் (மின் தூக்கியில்) ஒன்றாக இருந்தபோது குடிபோதையில் இருந்ததற்காக சந்தேக நபரைக் கண்டித்ததாகவும், லிப்டில் இருந்து வெளியேறியவுடன், சந்தேக நபரும் மற்றொரு நபரும் பாதிக்கப்பட்டவரை அவரது பிளாட் வரை துரத்தியதாகவும் அவர் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட நபரின் தலையில் ஹெல்மெட் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு உள்ளூர்வாசிகள் அவரை தாக்கப்பட்டது கண்டறியப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் ஹெல்மெட், மரம் மற்றும் லைட்டர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் விசாரணைக்காக சந்தேக நபர் அக்டோபர் 14 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
தகவல் அறிந்தவர்கள் விசாரணை அதிகாரி ஏஎஸ்பி முகமட் ஹபீசி இஸ்மாயிலை 013-3587571 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு முகமது ஃபக்ருதீன் கேட்டுக் கொண்டார்.









