நண்பரின் மகனை கொலை செய்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு, அக்டோபர் 14 :

நண்பரின் மகனை கொலை செய்ததாக ஈ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவருக்கு எதிராக, நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கறுப்புச் சட்டை அணிந்திருந்த 28 வயதான சான் வென் ஜீ என்ற குற்றஞ்சாட்டப்பட்டவர, தன் மீதான குற்றச்சாட்டை மாண்டரின் மொழியில் படிக்குமாறு கோரினார்.

அதற்கமைவாக அக் குற்றச்சாட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆர்.சாலினி முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

குற்றப்பத்திரிகையின் படி, விவாகரத்து பெற்ற சந்தேக நபரின் நண்பருக்கு சொந்தமாக இரண்டு குழந்தைகளை பராமரித்துவந்த சான், அக்டோபர் 2 ஆம் தேதி இங்குள்ள தாமான் ஸ்கூடாய் ரியா, ஜாலான் ரியா 2 இல் உள்ள ஒரு வீட்டில் இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை லீ சீ ஜீ என்ற நான்கு வயது சிறுவனை யை கொலை செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டவரிடமிருந்து எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனையை வழங்குகிறது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சானுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை, இரசாயனம் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை சமர்ப்பிக்கவும் வழக்கை மீண்டும் குறிப்பிடுவதற்கு நவம்பர் 17 ஆம் தேதியை நீதிபதி ஆர்.சாலினி நிர்ணயித்தார்.

அதே நீதிமன்றத்தில், சானுடன் கைது செய்யப்பட்ட ஒரு இந்தோனேசிய பணிப் பெண், சரியான ஆவணங்கள் ஏதுமின்றி மலேசியாவுக்குள் நுழைந்ததற்காக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(c) இன் கீழ் யூலியானா, 40, என்பவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது, இது RM10,000 க்கு மிகாமல் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டும் வழங்க வழி செய்கிறது.

இக்குற்றச்சாட்டினை யூலியானா ஒத்துக்கொண்டதால், நீதிபதி ஆர்.சாலினி அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here