கோலா நெராஸ், அக்டோபர் 15 :
இங்கு அருகிலுள்ள கோங் பாடாக்கில் உள்ள திரெங்கானு ரேசிங் சர்க்யூட்டில் நடந்த The Battle of The King (BOTK) 2022 கார் பந்தயத்தின் போது, அதன் பங்கேற்பாளர்களில் ஒருவர் இறந்ததால் போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது என்று BOTK 2022 இன் அமைப்பாளரான MUSC மோட்டார்ஸ்போர்ட் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் சமூகப் பக்கத்தின் மூலம் இந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, நாளை முடிவடையவிருந்த இந்த கார் பந்தயப் போட்டித் தொடர் இன்று உடனடி அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அது மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த அபே ஜமாலின் குடும்பத்தினருக்கு “MUSC தனது இரங்கலை தெரிவித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
BOTK 2022 கார் பந்தயத்தில் பங்கேற்கும் போது, அபே ஜமால் என்கின்ற முஹமட் ஹபீஸ் ஜமால் ஜமாலுடின் என்ற கார் பந்தய வீரர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவர் ஓட்டிச் சென்ற ரேஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், பலத்த காயங்களால் அவர் உயிரிழந்தார் என்றும் அறியமுடிகிறது.







