மாநிலத் தேர்தல்: காலை 10 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் மையங்கள் மூடப்பட்டன

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கெடா, கிளாந்தான், திரெங்கானு மற்றும் பினாங்கு ஆகிய 6 மாநிலத் தேர்தல்களுக்கான மொத்தம் 173 வேட்புமனுத் தாக்கல் மையங்கள், இன்று சனிக்கிழமை (ஜூலை 29) காலை 10 மணிக்கு மூடப்பட்டன.

அத்தோடு கோலா திரெங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தேர்வு தாக்கல் மையமாக இயங்கிய, கோலா திரெங்கானு நகராண்மைக் கழகத்தின் விருந்து மண்டபமும் அதே நேரத்தில் மூடப்பட்டது.

வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதியை மாநிலத் தேர்தல்களுக்கான நாளாகவும், கோலா திரெங்கானு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று முன்கூட்டியே வாக்களிப்பு நடக்கும் என்று தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது,

உத்தியோகபூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட இன்றிலிருந்து 14 நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரம் தொடங்கி, ஆகஸ்டு 11 இரவு 11.59 மணி வரை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

குறித்த ஆறு மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் மொத்தம் 245 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும், அதாவது கிளாந்தானில் 45: கெடாவில் 36 ; திரெங்கானுவில் 32; பினாங்கில் 40 ; சிலாங்கூரில் 56; மற்றும் நெகிரி செம்பிலானில் 36 சட்டமன்றத் தொகுதிகளே அவையாகும்.

மேலும் 15வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியைச் சேர்ந்த டத்தோ அஹ்மட் அம்சாத் ஹாஷிமின் வெற்றியை ரத்து செய்த திரெங்கானு தேர்தல் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கோலா திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here