பெரா, அக்டோபர் 15:
ஓய்வு பெற்ற போலீஸ்காரர்களின் சேவையைப் பாராட்டும் வகையில், மலேசியாவின் முன்னாள் போலீஸ் சங்கத்துக்கு RM200,000 சிறப்பு நிதியும், பகாங் முன்னாள் போலீஸ் சங்கத்திற்கு RM100,000 நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
சேவையில் இருக்கும் போது தேசிய பாதுகாப்பை பேணுவதற்கு உதவிய ஓய்வுபெற்ற போலீசாரின் நலன்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
“ஓய்வூதியம் பெறுவோர் தொடர்பான விஷயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம், ஓய்வு பெற்றவர்களுக்காக விசேஷமாக என்ன இருக்கிறது என்பதைக் கேட்க விரும்புகிறார்கள், ஆனால் அரசாங்கம் ஏற்கனவே தேசிய தொழில் முனைவோர் குழு பொருளாதார நிதி (Tekun) போன்ற பல்வேறு வணிகக் கடன்களை அறிவித்துள்ளது என்று, இன்று பகாங்கில் நடந்த முன்னாள் காவல்துறை சங்கத்தின் 42வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் இலாப நோக்கற்ற சங்கங்கள் அல்லது மலேசிய முன்னாள் போலீஸ் சங்கம் போன்ற அமைப்புகளுக்கு நிதி அளிக்கும் தனிநபர்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.








