சாலை விபத்தில் PJ City கால்பந்து அணி வீரர் பி. ராஜேஷ் உயிரிழந்தார்

கோம்பாக், அக்டோபர் 17 :

நேற்று, இங்குள்ள ஜாலான் ஸ்ரீ பத்துமலை அருகே, அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சறுக்கி மரத்தில் மோதியதில், பெட்டாலிங் ஜெயா நகர கால்பந்து அணி வீரர் (PJ City FC) உயிரிழந்தார்.

இரவு 11 மணியளவில் நடந்த சம்பவத்தில், உயிரிழந்த பி.ராஜேஷ், 37, பெனெல்லி 125i ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பத்து மூடாவிலிருந்து பத்துமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

திடீரென பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடதுபுறம் சறுக்கி மரத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று கோம்பாக் மாவட்ட காவல்துறையின் தலைமைக் கண்காணிப்பாளர் நூர் அரிஃபின் முகமட் நசீர் தெரிவித்தார்.

“விபத்தின் விளைவாக,மறைந்த ராஜேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது என்றும் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

“உடல் பிரேத பரிசோதனைக்காக செலாயாங் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் (APJ) 1987ன் பிரிவு 41(1)ன்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள், போக்குவரத்து புலனாய்வு அதிகாரி, இன்ஸ்பெக்டர் முகமட் ஷைபுடின் முகமட்டினை அல்லது 017-6645812 என்ற எண்ணில் அல்லது கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் செயல்பாட்டு அறையை 03-61262222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here