நாட்டின் 10 மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 21 :

நாட்டின் 10 மாநிலங்களில் இன்று இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் 2.20 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், கெடாவின் பாடாங் தெராப், சிக், பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு ஆகிய பகுதிகளும்; பினாங்கு, பேராக்கின் கெரியான், லாரூட், மாடாங் மற்றும் செலாமா, உலு பேராக், கோலா கங்சார், கிந்தா, கம்பர் மற்றும் பத்தாங் பாடாங்; கிளாந்தானின் ஜெலி, கோலக்கிரை மற்றும் குவா மூசாங் ஆகியவற்றுடன் திரெங்கானுவின் பெசூட், உலு திரெங்கானு, மாராங், டுங்கூன் மற்றும் கெமாமன் ஆகிய இடங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பஹாங்கின் கேமரன் ஹைலேண்ட்ஸ், லிப்பிஸ், ராப், ஜெரான்டுட், பெந்தோங், தெமெர்லோ மற்றும் குவாந்தான்; நெகிரி செம்பிலாநின் சிரம்பான், போர்ட்டிக்சன், கோலா பிலா மற்றும் ரெம்பாவ் மற்றும் ஜோகூரின் பத்து பகாட், குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு போன்ற இடங்களுக்கும் இந்த வானிலை நிலவும்.

அத்தோடு சரவாக்கின் பீடோங் (சரடோக் மற்றும் கபோங்), சரிகேய், சிபு (சிபு மற்றும் செலாங்காவ்), முக்கா, கபிட் (பெலாகா), பிந்துலு, மிரி (தெலாங் உசன் மற்றும் மருடி) மற்றும் லிம்பாங் மற்றும் தாவாவ், சண்டகான் (டோங்கோட், கினாபதங்கான்) மற்றும் குடாட் (பிடாஸ் மற்றும் குடாத்) ஆகிய பகுதிகள் இந்த இடியுடன் கூடிய கனமழையை எதிர்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.

இன்று இரவு 7 மணி வரை இந்த வானிலை தொடரும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here