பக்காத்தான் ஹராப்பான் ஆலோசகர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசாவின் தாயார் காலமானார்

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 24 :

முன்னாள் துணைப்பிரதமரும் PKR ஆலோசகர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் தாயார் காலமானார்.

இன்று திங்கள்கிழமை அதிகாலை (அக் 24) தனது மாமியார் மரியா காமிஸ் காலமானார் என்ற செய்தியை பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

“இன்று திட்டமிடப்பட்டிருந்த மிரி மற்றும் கூச்சிங் சுற்றுப்பயணத்தை ரத்து செய்ததற்காக ஹராப்பான் சரவாக்கின் தலைவர் மற்றும் ஆதரவாளர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இறைவன் நாடினால் நாம் மீண்டும் சந்திப்போம்,” என்றார்.

இந்த சோகமான செய்தியை மரியாவின் பேத்தி நூருல் இசா அன்வர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here