தோமி தாமஸுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் உள்ளது என்கிறார் பிரதமர்

கோலாலம்பூர், அக்டோபர் 25 :

முன்னாள் அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ தோமி தாமஸ் எழுதிய தனது நினைவுக் குறிப்பு நூலான ‘ ‘My Story: Justice In the Wilderness என்ற நூலில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் மற்றும் கருத்துக்களுக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் நான்கு குற்றங்களைச் செய்ததாக நம்பப்படுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

குற்றங்கள் தண்டனைச் சட்டம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சட்டம் மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அக்குற்றங்கள் இருப்பதாக அவர் கூறினார்.

இன்று புக்கிட் அமானில் தேர்தல் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பில் நடந்த 15வது பொதுச் சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் கூறுகையில், “இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விட்டுவிடுவோம், இது எம்ஏசிசி வழக்காக இருந்தால், எம்ஏசிசி விசாரிக்கும், அது குற்றவியல் சட்டத்தின் கீழ் இருந்தால், காவல்துறை விசாரிக்கும்” என்று அவர் கூறினார்.

நினைவுக் குறிப்பில் உள்ள விடயங்கள் தொடர்பிலான விசாரணைகளின் நிலை குறித்து செய்தியாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனவரி 2021 இல் அவர் எழுதிய நினைவுக் குறிப்பு வெளியிடப்பட்டபோது இது பல அதிகாரவர்க்கங்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது, இதன் விளைவாக பல்வேறு தனிநபர்கள் மற்றும் குழுக்களால் தாமஸுக்கு எதிராக 244 புகார்களை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here