ஸ்தாப்பாக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலுக்கு வெளியே காணப்பட்ட குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக, வீட்டின் ஜன்னலுக்கு வெளியே ஒரு குழந்தை இருப்பதைக் காட்டும் 11 வினாடி வீடியோ இன்று சமூக ஊடகங்களில் வைரலாகியது.
அந்த வீடியோவில், குழந்தை ஜன்னல் வழியாக குதிக்க முயற்சிப்பது போல் தெரிகிறது. வங்சா மஜு மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளரான அஷாரி அபு சாமாவை இன்று தொடர்பு கொண்டபோது, சம்பவம் குறித்து தனக்கு எந்த புகாரும் வரவில்லை என்று தெரிவித்தார்.
(சம்பவம் தொடர்பாக) எந்த புகாரும் வரவில்லை. நாங்கள் குற்றவாளிகளை (பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள்) தேடி வருகிறோம் என்று அவர் கூறினார். சம்பவத்தில் குழந்தை பத்திரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.