உணவு விநியோக திட்டத்தில் மோசடி செய்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் கைது

கோத்தா கினாபாலு, அக்டோபர் 26 :

கடந்த 2013 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட RM730,000 மதிப்பிலான உலர் மற்றும் ஈரமான உணவு வழங்கும் திட்டம் தொடர்பாக, நிறுவன உரிமையாளரை ஏமாற்றியதாகக் கூறி ஒரு தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆதாரத்தின்படி, 35 வயதான சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை ஏமாற்றி உணவுத் திட்டத்தை கூட்டாக செயல்படுத்துவதற்கு இணங்கினார். இதன் விளைவாக, நிறுவனத்தின் உரிமையாளர் சில லட்சம் வெள்ளிகளை இந்தச் செயல்பாட்டில் இழந்தார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு இன்று புதன்கிழமை (அக் 26) பிற்பகல் 2.30 மணியளவில் இங்குள்ள சபா மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்றபோது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சபா மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டத்தோ எஸ். கருணாநிதியை தொடர்பு கொண்டபோது, அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார், மேலும் மோசடி செய்ததற்காக தண்டனைச் சட்டப் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுவதாகக் கூறினார்.

நாளை வியாழக்கிழமை (அக் 27) கோத்தா கினாபாலு நீதிமன்றத்தில் சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்படும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here