கெத்தும் இலைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் தீயணைப்பு வீரர் உட்பட இருவர் கைது

ஜெலி, அக்டோபர் 30 :

கடந்த வியாழக்கிழமை, இங்குள்ள கம்போங் ரப்பானாவில் 850 கிலோகிராம் கெத்தும் இலைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தீயணைப்பு வீரர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

காலை 10.34 மணியளவில் கிரிக்கில் இருந்து ஜெலிக்கு ஒரு சாலைத் தடுப்பு வழியாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் வேனை எடுத்துச் செல்லும் போது, 30 வயதான தீயணைப்பு வீரர் தனது நண்பருடன் கைது செய்யப்பட்டதாக ஜெலி மாவட்ட காவல்துறைத் தலைவர், அஹ்மட் அரிஃபின் தெரிவித்தார்.

“கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களால் சந்தேகத்திற்கிடமான முறையில் ஓட்டிச் சென்ற வேனைப் பின்தொடர்ந்த போலீசார், சோதனைக்காக வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.

பின்னர் குறித்த வாகனத்தை சோதனையிட்டத்தில், “கெத்தும் இலைகள் கொண்ட 85 கருப்பு பைகள் கண்டெடுக்கப்பட்டன, அவை ஒவ்வொன்றும் 10 (கிலோ) எடையுள்ளவை என்றும் RM8,500 மதிப்புள்ளவை என்று, இன்று ஜெலி மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

“மேலும், இரண்டு சந்தேக நபர்களும் போதைப்பொருளுக்கு எதிரான சோதனையில் எதிர்மறையான பதிலைப்பெற்றனர்.

அக்டோபர் தொடக்கத்தில் இருந்து செயல்படும் குறித்த சந்தேகநபர்கள் ஒரு பயணத்திற்கு RM3,000 ஊதியம் பெறுவதற்காகவும், ஒரே மாதிரியான செயல்பாட்டைப் பயன்படுத்தி பல முறை இந்த செயலைச் செய்ததாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here