மலாக்கா, அக்டோபர் 30 :
இன்று காலை அலோர் காஜா மற்றும் மாலாக்கா தெங்கா ஆகிய மூன்று நிவாரண மையங்களில் 37 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 145 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அலோர் கஜாவில், வெள்ளத்தினால் அவர்களில் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் கம்போங் காடெக் மண்டபம் மற்றும் கம்போங் பெலிம்பிங் ஆகிய மண்டபங்களில் 16 குடும்பங்களை சேர்ந்த 45 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், மத்திய மலாக்காவில், 21 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் செக்கோலா கெபாங்சான் குருபோங்கில் உள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பட்டதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.