100 விழுக்காடு எரிந்த நிலையில் வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் சடலம் கண்டெடுப்பு

கோப்புப்படம்

ஷா ஆலாம், நவம்பர் 1 :

இன்று அதிகாலை Koridor Guthrie (GCE) நெடுஞ்சாலையின் 2.0 ஆவது கிலோமீட்டரில் 100 விழுக்காடு எரிந்த நிலையில் வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வாகனத் தீ விபத்து ஏற்பட்டது குறித்து தீயணைப்பு துறைக்கு அதிகாலை 1.15 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், தகவல் கிடைத்து ஆறு நிமிடங்கள் கழித்து தமது துறையினர் அந்த இடத்திற்கு வந்ததாகவும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறினார்.

அங்குவந்த தீயணைப்பு துறையினர் “ஓட்டுநரின் இருக்கையில் அடையாளம் தெரியாத ஒரு சடலத்தை கண்டுபிடித்தனர், சடலம் அகற்றப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

இதற்கிடையில், ஷா ஆலாம் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் தனது அறிக்கையில் சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

குறித்த சடலம் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஷா ஆலாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மரணத்திற்கான காரணம் மற்றும் அடையாளம் காண மேலதிக விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன” என்று அவர் கூறினார்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி, IPD ஷா ஆலம் ஆய்வாளர் முஹமட் ஹனிஃப் சுக்ரியை 014-8066744 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here