கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் கணபதி ராவ், ஜெயச்சந்திரன், சந்திரசேகர் உட்பட எழுவர் போட்டி

கோலாலம்பூர், நவம்பர் 5 :

கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் ஏழு முனைப்போட்டி நிலவுகிறது.

இதில் பக்காத்தான் ஹராப்பானின் கீழ் வி. கணபதி ராவ், தேசிய முன்னணியின் டி ஹூய் லிங்க் , பெரிக்காத்தான் நேஷனலின் பி. ஜெயச்சந்திரன், பார்ட்டி ராக்யாட் மலேசியாவின் எஸ்.சந்திரசேகர், வாரிசானின் வேட்ப்பாளர் ஒருவரும், மேலும் இருவர் சுயேச்சையாகவும் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

சிலாங்கூரின் கோத்தா கெமுனிங் மாநில சட்டமன்ற உறுப்பினரான கணபதி ராவ் தற்போதைய கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாக்கோவுடன் சமாதானமாக பேசி, இந்த தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

கணபதி ராவ் முதன் முதலில் 2013 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் கோத்தா ஆலாம் ஷா தொகுதியில் போட்டியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here