ஒராங் அஸ்லி இளைஞரின் மரணம் தொடர்பில் ஆடவர் கைது

குவாந்தான்:

லிபிஸ், சுங்கை கோயான், ஊத்தான் கம்போங் டெக்கலில் உயிரிழந்த ஒராங் அஸ்லி இளைஞரின் மரணம் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை 11 மணியளவில் 38 வயதுடைய சந்தேக நபர் வாகனத்தை ஓட்டிச் சென்று, 22 வயது மதிக்கத்தக்க பாதிக்கப்பட்டவரை சுங்கை கோயான் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக லிபிஸ் மாவட்ட காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் இஸ்மாயில் மான் தெரிவித்தார்.

இந்நிலையில் “சுங்கை கோயான் சுகாதார கிளினிக்கின் மருத்துவ அதிகாரி மதியம் 12.30 மணியளவில் வாகனத்தில் இருந்த பாதிக்கப்பட்டவரின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.

“அதைத் தொடர்ந்து, குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின்படி விசாரணைக்கு உதவுவதற்காக காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்,” என்று அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here