சபா தெனோம் வேட்பாளர் நியமன மையத்தில் பரபரப்பு நிலவியதை போலீசார் உறுதிப்படுத்தினர்

சபாவில் உள்ள Dewan DSP Antanom, 15ஆவது பொதுத் தேர்தல் (ஜிஇ15) வேட்பாளர் நியமன மையத்தில் பரபரப்பு நிலவியதை ராயல் மலேசியா காவல்துறை உறுதி செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சபா போலீஸ் கமிஷனர் டத்தோ இட்ரிஸ் அப்துல்லாவிடம் இருந்து விரிவான அறிக்கைக்காக காத்திருப்பதாக காவல்துறை தலைமை ஆய்வாளர் (ஐஜிபி) டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார்.

சபா போலீஸ் கமிஷனரின் அறிக்கைக்காக நான் காத்திருப்பது உண்மைதான்,” என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.முன்னதாக, இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகத்தில் வைரலானது.  இது தெனோம் நாடாளுமன்றத் தொகுதிக்காக Dewan DSP Antanom,நடந்த சலசலப்பைக் காட்டுகிறது.

கட்சியின் டத்தோ பீட்டர் அந்தோனியின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்ததால், Parti Kesejahteraan Demokratik Masyarakat (KDM)   ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here