தேர்தல் விதிமீறல்கள் குறித்து விசாரணை

கோலாலம்பூர்: Tapak Mahlus வாக்குச் சாவடியில் கூடாரத்தை எரித்ததற்காகவும், பாரிசான் நேஷனல் கட்சியின் கொடிகளை அகற்றியதற்காகவும்  Kulim நகரில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளதாக புக்கிட் அமானின் பொதுத் தேர்தல் நடவடிக்கை இயக்குநர்  டத்தோ ஹசானி கசாலி தெரிவித்தார்.

அந்த நபர் கொடிகளை அங்குள்ள ஒரு வாய்க்காலில் வீசியதாகக் கூறப்படுகிறது. மேலும்  லங்காவியில்,  பூலாவ் துபா வாக்குப்பதிவு மாவட்ட மையத் தலைவராக நியமிக்கப்பட்ட நபரை   மிரட்டியதாகவும்  ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த  நபர்   மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவலில்  வைக்கப்படுள்ளார்  என்றும் ஹசானி கூறினார்.

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக  பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளர் ரஸ்மான் ஜகாரியாவின் அவதூறான மற்றும் தீங்கிழைக்கும் வகையில் பேசியுள்ளார். சமூக ஊடகங்களை தவறான முறையில் பயன்படுத்துதல் மற்றும் அவதூறு  ஆகியவற்றின் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

 Jalan Athinahpan and Jalan Burhanuddin Helmi,  ஆகிய இடங்களில் இருந்து கொடிகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.  குற்றம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) இல்லை.

பிரச்சார பணியாளர்கள் எந்தவிதமான தீங்கிழைக்கும் செயல்களை  செய்ய வேண்டாம் என்றும்  அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர்களை சட்டவிரோத செயல்களில் இருந்து  விலகி  இருக்க  வலியுறுத்த  வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here