நாடாளுமன்றத்தில் விதிமுறைகளை மீறும் உறுப்பினர்களை 14 நாட்கள் இடைநீக்கம் செய்யலாம் – மாமன்னர்

கோலாலம்பூர்:

நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ விதிமுறைகளை மீறும் எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், அவர்களை 14 நாட்கள் இடைநீக்கம் செய்யவும் மேலவை மற்றும் மக்களவைv தலைமைகளுக்கு மேன்மை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிகாரமளித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகியுள்ள 15ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான அமர்வை ஆரம்பித்தது வைத்து உரையாற்றியபோது பேரரசர் இவ்வாறு கூறினார்.

அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் அவற்றின் விதி முறைகளுக்கு இணங்குவதை உறுதிச் செய்வதற்காக அனைவரும் தங்கள் கடமைகளைச் செய்யுமாறு அவர் நினைவுபடுத்தினார்.

“எனவே, சபையின் அனைத்து உறுப்பினர்களும் இந்த புகழ்பெற்ற மண்டபத்தில் இருக்கும்போது நல்ல எடுத்துக்காட்டுகளை மற்றும் ஒழுக்கத்தை காண்பிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று பேரரசர் இன்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here