மின்சார வாகனங்களுக்காக நாடு முழுவதும் 10,000 EV மின்னேற்றல் நிலையங்கள் நிறுவ அரசாங்கம் இலக்கு

கோலாலம்பூர், நவம்பர் 9 :

குறைந்த கார்பன் இயக்க புளூபிரிண்ட் 2021-2030ன் (The Low Carbon Mobility Blueprint 2021-2030) கீழ் 2025 ஆம் ஆண்டுக்குள் மலேசியாவில் மின்சார வாகனங்களுக்காக 10,000 பொது மின்னேற்றல் நிலையங்களை நிறுவுவதற்கான அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.

அதற்கான முயற்சியில் நாடு முழுவதும் இதுவரை 700 மின்னேற்றல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை மேம்பாட்டு இயக்குனர், முஹமட் சுல்ஹில்மி அஹ்மட் தெரிவித்தார்.

தனியார் துறையுடன் இணைந்து இந்த மின்னேற்றல் நிலையங்கள் நிறுவல்கள் வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டது.

மேலும் நாட்டில் EV உள்கட்டமைப்பை உருவாக்க ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு முன்னோடி அந்தஸ்து மற்றும் நிதி உதவி போன்ற வரிச் சலுகைகளை அரசாங்கம் வழங்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here