பள்ளிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து, 3ம் படிவ மாணவி உயிரிழந்தார்

அலோர் ஸ்டார், நவம்பர் 10 :

இங்குள்ள சிம்பாங் எம்பட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தில் இருந்து விழுந்ததாக நம்பப்படும் மூன்றாம் படிவ மாணவி இன்று இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அஹ்மட் சுக்ரி மாட் அகிர் கூறுகையில், காலை 7.30 மணியளவில் இந்த சம்பவம் குறித்து அவரது தரப்புக்கு அழைப்பு வந்தது என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், பள்ளி கட்டிடத்தில் இருந்து விழுந்ததாக நம்பப்படும் பள்ளி மாணவி குறித்த தகவலை பெற்றதும், சிம்பாங் எம்பாட் காவல் நிலையத்தின் தலைவர் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு நடத்தினார்.

“முதற்கட்ட விசாரணையில், நான்கு மாடி கட்டிடம் உள்ளது, அதில் கீழ் பகுதியில் ஒரு நூலகம் உள்ளது, இரண்டாவது மற்றும் நான்காவது தளங்கள் காலியாக உள்ளது மற்றும் மூன்றாவது மாடி ஆறாம் படிவ மாணவர்களுக்கான வகுப்பறையாக உள்ளது.

“இருப்பினும், சம்பவம் எப்படி நடந்தது என்பதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

பள்ளியின் அனைத்து மாணவர்களும் அந்தந்த வகுப்புகளுக்குள் நுழைவதற்கு முன்பு, காலை ஒன்றுகூடலில் கலந்து கொண்டதால் கட்டிடம் முழுவதும் காலியாக இருந்ததாக கூறினார்.

மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சுல்தானா பஹியா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“இதுவரை, வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here