ஷெல் பெட்ரோல் நிலையங்களை விற்கப் பேச்சுவார்த்தை!

கோலாலம்பூர்:

மலேசியாவில் உள்ள தனது பெட்ரோல் நிலையங்களை சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான சவூதி அராம்கோவிடம் விற்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக ஷெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் உள்ள ஷெல் பெட்ரோல் நிலையங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்படக்கூடும் என்றும், பேச்சுவார்த்தைகள் குறித்து மேல் விவரங்களை வெளியிட ஷெல் நிறுவனம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், அராம்கோ நிறுவனமும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

லண்டனை மையமாகக் கொண்ட ஷெல் நிறுவனத்துக்கு மலேசியாவில் ஏறத்தாழ 950 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.

பெட்ரோல் நிலையங்களை விற்பனை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை 2023ஆம் ஆண்டிறுதியில் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அடுத்த சில மாதங்களில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here