GE15 பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரத்தை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது .இந்த தேர்தலில் நாடு முழுவதும் 6 மில்லியன் மக்கள் வாக்காளிக்க உள்ளனர். நேரம் என்பது கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மட்டுமே.
வாக்காளர்களுக்கு பதிவு எண்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள நேரம் ஒரு பரிந்துரை மட்டுமே. நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ வந்தால், நீண்ட வரிசையில் நிற்க நேரிடலாம் என்றும் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணைய இணைய தளத்தின்படி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், சபா மற்றும் சரவாக்கில் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் வாக்களிக்கும் நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.






















