கிள்ளான் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி

கோப்புப்படம்

கோலாலம்பூர், நவம்பர் 11 :

நேற்றய நிலவரப்படி, கிள்ளானில் இயங்கிவரும் ஒரு தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நான்கு பேருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெள்ளத்திற்கு முன்பு வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், சுகாதார அமைச்சகத்தின் தற்போதுள்ள நிலையான இயக்க நடைமுறைகளின்படி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

“இவர்கள் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு உள்ளூர்வாசிகளாவர். எங்கள் SOP இன் படி அவர்கள் கம்போங் புடிமான் (Kampung Budiman) பொது மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்,” என்று அவர் இன்று சைபர்ஜெயா மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சை பிரிவின் ஆரம்ப விழாவிற்குப் பின்னர் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here