ஷா ஆலாம், நவம்பர் 11 :
இன்று காலை 10.15 நிலவரப்படி, சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 147 குடும்பங்களைச் சேர்ந்த 633 பேராக அதிகரித்துள்ளது என்று சமூக நலத் துறையின் (JKM) பேரிடர் தகவல் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, ஷா ஆலாம் மற்றும் கிள்ளானின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிலாங்கூரில் மூன்று வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன.