கோலாலம்பூர், நவம்பர் 11 :
இன்று நண்பகல் நிலவரப்படி, சிலாங்கூர், கிளாந்தான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 175 குடும்பங்களைச் சேர்ந்த 731 பேராக அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள எட்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
சிலாங்கூர் வெள்ள மேலாண்மைக் குழுவின் கண்காணிப்பின்படி பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள கம்போங் புடிமானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் தற்போது முற்றிலுமாக வடிந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை குழு (நட்மா) இன்று தெரிவித்துள்ளது.









