கோத்தகினபாலு, சபாவின் வடக்கு குடாட் மாவட்டத்தில் உள்ள தஞ்சோங் சிம்பாங் மெங்கயாவ் கடற்பரப்பில் நீருக்கடியில் இருந்து தன்னார்வலர்கள் 36 கிலோவுக்கும் அதிகமான “தேவையற்ற வலைகளை” அகற்றினர்.
சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினத்தை ஒட்டி சபா மீன்வளத் துறையின் ஒத்துழைப்புடன் குடாட் ஆமை பாதுகாப்புச் சங்கம் (KTCS) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி நடைபெற்றது. KTCS இன் முகநூல் பதிவின்படி, தூய்மைப்படுத்தும் திட்டத்தின் போது நீருக்கடியில் இருந்த 36.5 கிலோ எடையுள்ள சிதறிய தேவையற்ற வலைகள் அகற்றப்பட்டன.
இவ்வாறு இருப்பதற்கு அப்பகுதியில் இருப்பவர்களின் மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக இருந்திருக்கலாம் என்று KTCS தெரிவித்துள்ளது. கடற்பகுதியை சுத்தமாக வைத்திருக்கவும், அதை பராமரிப்பதிலும் அதிக மக்களை ஈடுபடுத்த வேண்டும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.
Bluefin Kudat, World Wide Fund for Nature (WWF) Malaysia, Tommy’s Place, Kotak-Kotak Borneo மற்றும் Kg Bavang Jamal மற்றும் Kg Simpang Mengayau ஆகிய சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும் தூய்மைப் பணிக்குப் பங்களிப்பு செய்தனர் என்று KTCS கூறியது.
நிராகரிக்கப்பட்ட வலைகள் கடலில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் முக்கிய காரணமாகும். இந்த வலைகளில் ஆமைகள் மற்றும் பிற கடல் வாழ் இனங்கள் சிக்கிக்கொள்கின்றன. மென்மையான பவள அடுக்குகள் வெட்டப்படுகின்றன. இது கடலின் சுற்றுச்சூழல் அமைப்பை பாதிக்கிறது என்று சங்கம் தெரிவித்தது .