சிமுஞ்சான், நவம்பர் 13 :
நேற்று செபாங்கன் கம்போங் சம்பாத்தில், மீனவரைப் பிடிக்க முயன்றதாக நம்பப்படும் முதலையை சரவாக் வனக் கழகத்தின் (SFC) ஸ்விஃப்ட் வனவிலங்கு நடவடிக்கைக் குழு (SWAT) வெற்றிகரமாகப் பிடித்தது.
15 அடி நீளமுள்ள அந்த முதலை , 400 கிலோகிராம் எடையுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
SFC அறிக்கையின்படி, 21 அக்டோபர் 2022 அன்று மீனவர் ஒருவர் தனது முகநூலில் தன்னை முதலை பிடிக்க முயன்றதாக பகிர்ந்ததைத் தொடர்ந்து, முதலைப் பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அது தெரிவித்தது.
ஆறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன்பிடி அல்லது வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடும்போது, மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட மற்றும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளைப் பிடிப்பவர்கள், வேட்டையாடுபவர்கள், வர்த்தகம் செய்பவர்கள் அல்லது பாதுகாப்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் SFC ஹாட்லைனை 019-8859996 (கூச்சிங்), 019-8883561 (சிபு), 019-8332737 (பிந்துலு) அல்லது 019- 8290994 (மிரி) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.