15வது பொதுத்தேர்தல்: பெர்லிஸ் காவல்துறையினர் தமது ஜனநாயக கடமையை இன்று நிறைவேற்றுகின்றனர்

கங்கார், நவம்பர் 15 :

15வது பொதுத்தேர்தலுக்கான (GE15) வாக்களிக்கும் கடமையை முன்னதாக மேற்கொள்ளும் அரச மலேசிய காவல்துறையினர் (PDRM) 1,578 பேர் இன்று நிறைவேற்றினர்.

இங்குள்ள பெர்லிஸ் காவல் படைத் தலைமையகத்தின் பல்நோக்கு மண்டபத்தில் நடத்தப்பட்ட வாக்களிப்பு செயல்முறையில், காவல்துறை உறுப்பினர்களும் அதிகாரிகளும் வாக்களிப்பதற்காகக் காத்திருந்ததைக் காணமுடிந்தது.

பெர்லிஸ் காவல்துறைத் தலைவர் டத்தோ சுரினா சாத் காலை 8.40 மணிக்கு தனது ஜனநாயக கடமைகளைச் செய்தார்.

அதனைத்தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் 1,578 போலீசார் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவை மேற்கொள்வார்கள் என்று, சுரினா கூறினார்.

பாடாங் பெசார், கங்கார் மற்றும் ஆராவ் ஆகிய மூன்று நாடாளுமன்றங்களை உள்ளடக்கிய மொத்தம் ஒன்பது ஆரம்ப வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன, இன்று பிற்பகல் 5 மணி வரை வாக்குப்பதிவு இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here