புதிய வாகனங்களின் விற்பனை 5.8% குறைந்தது

நாட்டின்  வாகன விற்பனை அக்டோபர் 2021 இல் 64,762  அலகுகளுடன்  (units)இருந்தது. அதை  ஒப்பிடுகையில்,  அக்டோபர்  2022 இல் 5.8% சரிந்து 61,002  அலகுகளாக   (units) உள்ளது என்று மலேசிய ஆட்டோமோட்டிவ் அசோசியேஷன் (MAA) தெரிவித்துள்ளது.

மாதாந்திர அறிக்கையின்படி அக்டோபரில்  பயணிகள் வாகனங்களின் (passengers vehicle) விற்பனை 54,498 அலகுகளாகவும், வணிக வாகனங்களின் விற்பனை (commercial vehicle) 6,504 அலகுகளாகவும் இருந்தன.  அக்டோபர் 2022 க்கான மொத்த தொழில்துறை அளவு (டிஐவி) செப்டம்பர் 2021 ஐ விட 10% குறைந்து 67,698 அலகுகளாக இருந்தது  என்று MAA கூறியது.

கார் உற்பத்தியாளர்கள் ஜூன் 30 க்கு முன் செய்யப்பட்ட முன்பதிவுகளை மெதுவான வேகத்தில் பூர்த்தி செய்து வருகின்றனர். உதிரிபாகங்களின்   பற்றாக்குறையும் மிகச் சிறிய அளவில் ஏற்பட்டுள்ளது.   மொத்த உற்பத்தியைப் பொறுத்தவரை, அக்டோபர் 2021 இல் 65,410 அலகுகளுடன் ஒப்பிடுகையில், அக்டோபரில்  2022 இல்  58,991 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here