பாலியல் துஷ்பிரயோக வழக்கில் மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத் தண்டனை

இஸ்தான்புல், நவம்பர் 17:

துருக்கியேயில் பாலியல் வன்கொடுமை மற்றும் இராணுவத்தை உளவு பார்த்தல் ஆகிய குற்றச்சாட்டில் மத போதகர் ஒருவருக்கு இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது.

துருக்கியை சேர்ந்த அட்னான் அக்தார் (66) மதபோதகராக கருதப்பட்டார். ஏ9 என்ற தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றார். அக்தார் பழமைவாத கொள்கைகளை ஆதரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இருந்தார்.

அவருக்கு கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை, சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தல் மோசடி மற்றும் இராணுவத்தை உழவு பார்த்தல் என பல குற்றங்கள் சுமத்தப்பட்டது.

தற்போது இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது. நீதிமன்றம் அவருடன் சேர்த்து மேலும் 10 குற்றவாளிகளுக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here