ஞாயிற்றுக்கிழமையை பாத்தேக் தினமாக அறிவித்தது திரெங்கானு மாநில அரசு

கோல திரெங்கானு:

ஞாயிற்றுக்கிழமைகளை பாத்தேக் தினமாக திரெங்கானு மாநிலஅரசு அறிவித்துள்ளது.

மாநில அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்கள், தொழில்முனைவோர் மற்றும் திரெங்கானு குடியிருப்பாளர்கள் என அனைவரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாத்தேக் அணிய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று, மாநில சுற்றுலா, கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றக் குழுவின் தலைவர் டத்தோ ரசாலி இட்ரிஸ் கூறினார்.

அத்தோடு “வியாழன் கிழமைகளில் கட்டாயம் பாத்தேக் ஆடைக் குறியீடு (அரசு ஊழியர்களுக்கு) பின்பற்றப்படுவது உட்பட, எந்த நேரத்திலும் பாத்தேக் ஆடை அணிவதை ஊக்கிவிக்கும் மத்திய அரசின் முயற்சியை மாநில அரசு ஆதரிக்கிறது என்றும் அவர் சொன்னார்.

“வெளிநாட்டில் இருந்து, குறிப்பாக இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாத்தேக் ஆடைகள் அதிகரித்து வருவதால், அதற்கு மாற்றீடாக மக்களின் தேவை மற்றும் விருப்பங்களிற்கு ஏற்ப திரெங்கானு பாத்தேக் தொழிற்துறை புத்துயிர் பெற இது ஒரு நல்ல வாய்ப்பாக நான் கருதுகிறேன்,” என்று நேற்று திரெங்கானு மலேசியா கார்னிவல் (KBTM) 2024 ஐ தொடங்கிவைத்த பிறகு, அவர் கூறினார்.

எவ்வாறாயினும், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் அரசு ஊழியர்களுக்கான ஆடைக் குறியீட்டிற்கு உட்பட்டவர்கள் என்றும், மாநிலச் செயலர் அலுவலகத்தின் மனிதவள மேலாண்மைப் பிரிவினால் அது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்படும் என்று ரசாலி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here