நாளைய வாக்குப்பதிவு தினம் முழுவதும் அனைத்து பொது போக்குவரத்து சேவைகளிலும் இலவசமாக பயணம் செய்யலாம்

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 18 :

15வது பொதுத்தேர்தலின் வாக்குப்பதிவு நாளான நாளை முழுவதும் RapidKL, Rapid Penang மற்றும் Rapid Kuantan ஆகியவற்றின் கீழ், அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளிலும் பயணிகள் இலவச பயணங்களை அனுபவிக்க முடியும் என்று Prasarana Malaysia Bhd அறிவித்துள்ளது.

இதில் Rapid பேருந்துகள், மோனோரயில், MRT, BRT மற்றும் LRT சேவைகள் அடங்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

“இது மலேசியர்கள் தமது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதை எளிதாக்கும்” என நம்புவதாக Prasarana இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

My50 பாஸ் வைத்திருப்பவர்கள் வழக்கம் போல் சேவைகளைப் பயன்படுத்தலாம், அதே நேரத்தில்Touch ‘n Go அட்டைப் பயனர்கள் தங்கள் அட்டைகளில் இருந்து கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்ய முடியும்.

மோனோரயில், MRT, BRT மற்றும் LRT வழித்தடங்களில் டோக்கன்களைப் பயன்படுத்த விரும்பும் பிற பயணிகள், சிறப்பு ஒருவழி டோக்கனைப் பெற, எந்த நிலையத்திலும் வாடிக்கையாளர் சேவை அலுவலகத்திற்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம் என அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here