பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கருப்பையா முத்துசாமியின் மரணம் காரணமாக பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதிக்கு சனிக்கிழமை (நவம்பர் 19) வாக்குப்பதிவு இல்லை என்று தேர்தல் ஆணையம் (EC) தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 18) நடந்த கூட்டத்தில், 15ஆவது பொதுத் தேர்தலில் தொகுதிக்கான முக்கிய தேதிகளை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
இந்தத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என்றும் முன்கூட்டியே வாக்குப்பதிவு டிசம்பர் 3ஆம் தேதியும், வாக்குப்பதிவு டிசம்பர் 7ஆம் தேதியும் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









