மோசமான வெள்ளத்தால் திரெங்கானு மாநிலம் பாதிக்கப்பட்டிருக்கும்போது, வெளிநாட்டில் விடுமுறையில் இருந்ததற்காக மந்திரி பெசார் மன்னிப்பு கோரவேண்டும்

திரெங்கானு மாநில மக்கள் வெள்ளப் பேரிடரை எதிர்கொண்டிருக்கும்போது, வெளிநாட்டில் இருந்ததற்காக பல்வேறு தரப்பினராலும் கடுமையாகச் சாட்டப்பட்டிருக்கும் திரெங்கானு மந்திரி பெசார் அஹ்மாட் சம்சுரி மொக்தார், தமது செயலுக்காக மாநில மக்களிடம் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும், அது மட்டுமன்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ளப் பேரிடர் நிவாரண உதவியை அதிகரிக்கச் செய்யவும் வேண்டும் என்றும், அரசியல் ஆய்வாளரான அஹ்மாட் ஃபௌசி அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார்.

“மந்திரி பெசார் தமது ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு செல்ல டிசம்பர் மாதத்தை திட்டமிட்டிருக்கக் கூடாது” என்று மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரான அவர் மேலும் கூறினார்.

“வெள்ள நிலைமை மேலும் மோசமடையும்போது, மந்திரி புசார் தமது விடுமுறையை இடையிலேயே விட்டுவிட்டு, நாடு திரும்புவார் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அவர் அப்படி செய்யவில்லை” என்றும் அவர் கூறினார்.

வெள்ளப் பிரச்னையை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் அரசாங்க நிறுவனங்களும் சந்தித்து வரும் வேளையில், சம்சுரி தரப்பிடம் இதுவரை மன்னிப்பு கோரப்படாதது குறித்து அவர் இன்று கேள்வி எழுப்பினார்.

கடந்த வெள்ளிக்கிழமை திரெங்கனு மாநிலத்தை வெள்ளம் தாக்கியபோது பாஸ் கட்சியின் துணைத் தலைவரும் திரெங்கானு மந்திரி பெசாருமாகிய அஹ்மாட் சம்சுரி மொக்தார் அங்கு இல்லாதது, மாநில மக்களிடையே கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்திஇருந்தது

அஹ்மாட் சம்சுரி தமது விடுமுறைக்காக நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து  இன்று மலேசியா திரும்பியதாகவும், அவர் இப்போது கோலாலம்பூரில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இருப்பினும், இன்று பிற்பகல் வரை, அஹ்மாட் சம்சுரியின் தற்போதைய இருப்பிடம் குறித்து மந்திரி பெசார் அலுவலகம் உட்பட மாநில அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here