சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மேலாக்கா, ஜோகூர் மற்றும் சபா ஆகிய இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வெளியிட்ட அறிக்கையில், சிலாங்கூரில், ஹுலு லங்காட் பகுதியில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், ஜோகூரில் டாங்காக், செகாமட், மூவார், பட்டு பஹாட், க்ளுவாங், போண்டியன் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தவாவில் உள்ள நபவான், குனாக் மற்றும் லஹாட் பத்து மற்றும் சண்டகானில் உள்ள டாங்கோட் ஆகியவற்றின் உள்பகுதிகளிலும் இதே வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வானிலை ஆய்வுமையம் அதன் இணையதளம் வழியாக, சரவாக்கில் பிந்துலு, மிரி மற்றும் லிம்பாங்கில் உள்ள பல பகுதிகளில் மேகமூட்டமான வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளது.