கூச்சிங்,
சரவாக் மாநிலம் முகா பகுதியிலுள்ள பெலாவாய் கடற்கரை அருகே இன்று பிற்பகல் ஒரு படகு கவிழ்ந்ததில் நால்வர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஆறுபேர் காணாமல் போயுள்ளனர்.
சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை செயல்பாட்டு மையத்தின் செய்திக்குறிப்பில், இந்த விபத்தில் ஏழு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
விபத்து இன்று பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்டது. 2.11 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சம்பவ இடத்துக்கு தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்பு குழு அனுப்பப்பட்டது.மூன்று மணி 12 நிமிடங்களுக்கு சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழு, 17 பயணிகளை ஏற்றிச் சென்ற ஃபைபர் கண்ணாடி படகு கடலில் கவிழ்ந்தது என அறிக்கை வழங்கியது,” என அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.
உயிரிழந்த நால்வரின் உடல்களை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், மீட்பு குழுக்கள் கடற்கரையை தூரத்திலிருந்து தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சரவாக் கடலோர பாதுகாப்புப் படையின் படகு உதவியுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோரும் காணாமல் போனவர்களும் தொடர்பான முழு விபரங்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.




















