தொழிலதிபர் கடத்தல் வழக்கில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்

சிரம்பானில் தொழிலதிபரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வெளிநாட்டவர்களான மேலும் மூன்று சந்தேகநபர்கள் குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

புக்கிட் அமானின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிரம்பான் காவல்துறைத் தலைவர் ஹட்டா சே டின் கூறினார். சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் பொது அதிகாரி என்பதால், போலீசார் விசாரிக்க வேண்டிய பல்வேறு அம்சங்கள் உள்ளன என்று அவர்  கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கடத்தல் தொடர்பான விசாரணையை எளிதாக்குவதற்காக ஒரு சோதனையில் 3 பேர் உட்பட நால்வரும் ஜனவரி 12 அன்று கைது செய்யப்பட்டனர். வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவர், தனது சகோதரரை, பண்டார் ஸ்ரீ செண்டையான், சிரம்பானில் ஒரு குழுவினர் அழைத்துச் சென்றதாகக் கூறி புகார் அளித்ததை அடுத்து, கைது செய்யப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர் சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து 70,000 ரிங்கிட் கடனாக பெற்றுள்ளார். ஆனால் அவரது கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. குற்றவியல் சட்டம் பிரிவு 363இன் கீழ் கடத்தல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here