பத்து தொகுதியிலுள்ள ஒரு வாக்குச் சாவடி மையத்திற்கு வெளியே இலவச செண்டோல்- என் வணிகத்தை ஆதரித்தவர்களுக்கு நான் செய்யும் சிறு கைமாறு என்கிறார் அதன் உரிமையாளர்

கோலாலம்பூர், நவம்பர் 19 :

இங்குள்ள பத்து நாடாளுமன்ற தொகுதியிலுள்ள உள்ள ஒரு வாக்குச் சாவடி மையத்திற்கு வெளியே, வாக்காளர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில் “இலவச செண்டோல்” வழங்குகிறார் அப்பகுதி சிறு வணிகர் நோர் முகமட் யூசோப்.

Majlis Kebajikan dan Pembangunan Masyarakat Kebangsaan Malaysia (Makpem) இயங்கிவரும் வாக்குச் சாவடி மையத்தின் நுழைவாயிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருக்கும் குறித்த கொட்டகையில், இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் வரை செண்டோல் இலவசமாக வழங்கப்படும் என்று அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

“நான் 2019 ஆம் ஆண்டு முதல் 99 ஸ்பீட்மார்ட், பண்டார் பாரு செந்தூல் முன் செண்டோல் விற்பனை செய்து வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் எனது வணிகத்தை ஆதரித்த சமூகத்திற்குத் நான் திரும்பக் கொடுப்பதற்கான ஒரு வழியாக இந்த இலவச செண்டோல் வழங்குகிறேன் என்று அவர் கூறினார்.

2018 ஆம் ஆண்டு 14வது பொதுத் தேர்தலின் போதும் தன இலவச செண்டோல் வழங்கியதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here