கூலாய், நவம்பர் 19 :
ஃபெல்டா புக்கிட் பெர்மாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், இன்று பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றினால் 17 வீடுகள் மற்றும் 3 கடைகள் சேதமடைந்தன என்று, ஜோகூர் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சிக் குழுத் தலைவர், டத்தோ முகமட் ஜஃப்னி முகமட் ஷுகோர் தெரிவித்தார்.
இன்று காலை 8 மணியளவில் நடந்த சம்பவத்துடன் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் இவ்வாறு புயல் தாக்குவது மூன்றாவது தடவையாகும்.
“இந்த புயல் காற்றினால் மரங்கள் வீழ்ந்தது மற்றும் வீட்டின் கூரை ஓடுகள் என்பனவும் சேதமடைந்தன, ”என்று பெர்மாய் சட்டமன்ற உறுப்பினர் இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.









