டாக்டர் மகாதீர் உட்பட 369 நாடாளுமன்ற வேட்பாளர்கள் தங்கள் வைப்புத் தொகையை இழந்தனர்

கோலாலம்பூர், நவம்பர் 20 :

நடைபெற்று முடிந்த நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, மொத்த வாக்குகளில் எட்டில் ஒரு பங்கிற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற 369 நாடாளுமன்ற வேட்பாளர்கள் தனது வைப்புத்தொகையை இழந்தனர்.

இதில் லங்காவியில் போட்டியிட்ட பெஜுவாங் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான டாக்டர் மகாதீரும், அவரது மகனும் முன்னாள் கெடா மந்திரி புசாருமான டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் அப்துல் கானி அகமட் ஆகியோரும் அடங்குவர்.

லங்காவியில் நடந்த ஐந்து முனைப் போட்டியில் அளிக்கப்பட்ட மொத்தம் 48,123 வாக்குகளில் டாக்டர் மகாதீர் 4,566 வாக்குகளை மட்டுமே பெற்று, இரண்டாவது முறையாக அந்த இடத்தைப் தக்கவைக்க தவறிவிட்டார்.

இதற்கிடையில், மாநிலத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மொத்தம் 441 வேட்பாளர்களில் 129 பேர் தங்களின் வைப்புத்தொகையை இழந்தனர்.

வேட்பாளர்கள் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிட RM10,000 மற்றும் சட்டமன்றத் தொகுதிக்கு RM5,000 வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here