2021இல் விவாகரத்து: மலாய்காரர்களிடையே குறைந்துள்ளது- இதர இனத்தவரிடையே அதிகரித்துள்ளது

மலேசிய புள்ளியியல் துறை (DOSM) வெளியிட்டுள்ள சமீபத்திய திருமணம் மற்றும் விவாகரத்து புள்ளிவிவரங்களின்படி, விவாகரத்துகளின் எண்ணிக்கை 2020 இல் 47,272 இல் இருந்து 7.1% குறைந்து கடந்த ஆண்டு 43,934 ஆக பதிவாகியுள்ளது.

தலைமை புள்ளியியல் நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 18, 2020 முதல் நவம்பர் 21, 2021 வரையிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது, ​​ஷரியா நீதிமன்றம், சிவில் நீதிமன்றம் மற்றும் தேசியப் பதிவுத் துறை ஆகியவை செயல்படாததே  இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.

முஸ்லீம் விவாகரத்துகள் குறைந்துள்ள   மாநிலங்களாக  சரவாக்,  பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநிலங்கள் உள்ளன.  இருப்பினும், முஸ்லீம் அல்லாத விவாகரத்துகள் 2020 இல் 9,419 இல் இருந்து 30.4% அதிகரித்து கடந்த ஆண்டு 12,284 ஆக உயர்ந்துள்ளது, சிலாங்கூர், கெடா மற்றும் கோலாலம்பூர் ஆகியவை அதிக அதிகரிப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளன.

திருமணங்களைப் பொறுத்தவரை, 2020 இல் 186,297 திருமணங்களில் இருந்து 2021 இல் 214,943 ஆக 15.4 % அதிகரித்துள்ளது என்று முகமட் உசிர் கூறினார்.  முஸ்லிம் திருமணங்களின்  அதிகரிப்பைப் பதிவு செய்த மூன்று மாநிலங்கள் கிளந்தான் (61.3%)  லாபுவான் (56.0 %) மற்றும் புத்ராஜெயா (37.3%), அதே சமயம் முஸ்லிம் அல்லாத திருமணங்களின் எண்ணிக்கை 40,854 இல் இருந்து 4.75%  குறைந்துள்ளது  என்று அவர் கூறினார்.

2021ல் நடந்த மொத்த திருமணங்களில் கிட்டத்தட்ட 8% கலப்பு  திருமணங்கள் ஆகும், இது 2020 இல் 14,448 திருமணங்களில் இருந்து 11.7% அதிகரித்து கடந்த ஆண்டு 16,142 ஆக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here