அமெரிக்காவில் உள்ள சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவுக்கு உளவு பார்ப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டு அரசு சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் சீனாவின் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஹவாய் மற்றும் இசட்.டி.இ ஆகிய இரு நிறுவனங்களின் தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் மத்திய தகவல் தொடர்பு ஆணையம் சீனாவின் இந்த 2 நிறுவனங்களையும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பட்டியலில் சேர்த்ததை தொடர்ந்து, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர வீடியோ கண்காணிப்பு கருவிகள் மற்றும் இருவழி ரேடியோ அமைப்புகளை உருவாக்கும் சீன நிறுவனங்களான டஹுவா, ஹைக்விஷன் மற்றும் ஹைடெரா ஆகிய நிறுவனங்களின் உபகரணங்ளையும் இறக்குமதி மற்றும் விற்பனை செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.