புத்ராஜெயா:
வங்களாதேச நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எம்.ஏ. குயூம் தொடர்பில், அவருக்கு எதிரான குடிநுழைவு துரையின் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை, அரசாங்கம் அவரை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பாது.
குடிநுழைவுத் துறை நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்படும் என்று குவாயூமின் வழக்கறிஞரிடம் உறுதியளித்ததாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் நேற்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் சொன்னார்.
குடிநுழைவுத் திணைக்களத்தினால் சட்டத்திற்குப் புறம்பான தடுப்புக் காவலில் தன்னை வைத்திருப்பதாக அவர் கூறுவதில் இருந்து விடுவிக்கக் கோரி, குவாயூமின் ஹேபியஸ் கார்பஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அரசாங்கம் காத்திருக்கும் வேளையில், இந்த உறுதிப்பாடு எடுக்கப்பட்டுள்ளது என்று சைஃபுடின் கூறினார்.
“நீதிமன்றத்தின் உத்தரவுக்கு குடிநுழைவுத் துறை இணங்கும் என்று நான் குவாயூமின் வழக்கறிஞரிடம் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில் குறித்த அரசியல்வாதி ரகசிய இடத்தில் வைக்கப்பட்டார் என்ற கூற்றுக்களை அவர் மறுத்தார். ஏனெனில் அவரது மனைவி அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார், எனவே, அவர் எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது என்ற குற்றச்சாட்டுகளில் உண்மையல்ல என்று அவர் கூறினார்.
முன்னதாக, வங்களாதேச தேசியவாதக் கட்சியின் தலைவரான குயூம், ஜனவரி 12 ஆம் தேதி மலேசிய காவல்துறை மற்றும் வங்காளதேச உளவுத்துறையின் கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.
























