நான்கு குடும்ப உறுப்பினர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில், 9 வயது சிறுவன் உயிரிழந்தான்

ஸ்ரீ அமான், நவம்பர் 27 :

முங்கு தபாங், புக்கிட் பெகுனான் என்ற இடத்தில் நேற்று நான்கு பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில், ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்தான்.

சம்பவத்தில், உயிரிழந்த சிறுவன் தனது தாய் மற்றும் ஆறு வயது சகோதரியுடன் தனது தந்தை ஓட்டிச் சென்ற காரில் சென்று கொண்டிருந்தது ஆரம்ப விசாரணையில் அறிய முடிகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 5.15 மணிக்கு தமக்கு தகவல் கிடைத்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உடனே ஸ்ரீ அமான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்களை சம்பவ இடத்திற்குத் விரைந்ததாகவும், “சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது, பெரோடுவா அல்சா கார் ​​கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் செல்வதற்குள், பாதிக்கப்பட்ட அனைவரும் பொதுமக்களால் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.

“சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர் சிறு காயங்களுக்கு உள்ளானார், அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவரின் 9 வயதான சிறுவன் இறந்துவிட்டதாக மலேசிய சுகாதார அமைச்சகத்தின் உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர்.

“மேலும் உயிரிழந்த சிறுவனின் தாயும் சகோதரியும் பின்தொடர் சிகிச்சைக்காக பாந்து கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

“மீட்பு நடவடிக்கை மாலை 6.32 மணிக்கு முழுமையாக முடிந்தது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here