இரண்டு அல்லது மூன்று நாட்களில் அமைச்சரவை பட்டியல் வெளியாகும் :அன்வார்

பிரதமர் அன்வார் இப்ராஹிம்  அடுத்த “இரண்டு அல்லது மூன்று நாட்களில்” தனது அமைச்சரவை   பட்டியலை   அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பெயர் பட்டியல் ஏறக்குறைய முடிவாகிவிட்டது என்று அவர் கூறினார்.

மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவால் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவையை  அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் ஆலோசித்து  அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும்    என்று அவர் தனது முகநூல்  பக்கத்தில்   கூறினார்.  துணைப் பிரதமர்களாக  கபுங்கன் பார்ட்டி சரவாக் (ஜிபிஎஸ்) மற்றும் பாரிசான் நேஷனல் (PN), கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்  என தெரியவந்துள்ளது.

பிகேஆர், அம்னோ, டிஏபி, ஜிபிஎஸ் ஆகியவற்றுக்கு அதிக அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவரின் அமைச்சரவையில் வாரிசன், அமானா மற்றும் உப்கோ ஆகியோரும் இடம்பெற உள்ளனர்.  ஒரு பிரதமராக, மற்றவர்களை விட தனக்கு அதிக பொறுப்பு உள்ளது என்றும்    நான் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்  என்றும் அன்வார் கூறினார்.

புதிதாக அமைக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவை அனைத்து பங்குதாரர்களின் கருத்துக்களையும் கேட்ட பிறகு கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று அன்வார் கூறினார்.  இந்த அமைச்சரவை முந்தைய நிர்வாகங்களை விட சிறியதாக இருக்கும் என்பதால், பேச்சுவார்த்தைகளுக்கு நேரம் எடுத்துக் கொள்கிறது என்றும் PH தலைவர் கூறினார்.

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் BN மற்றும் சபா மற்றும் சரவாக் – கபுங்கன் ரக்யாட் சபா மற்றும் ஜிபிஎஸ் ஆகியவற்றின்   கூட்டணிகளால் ஆனது.  இதற்கு மூடா, வாரிசன், பார்ட்டி பங்சா மலேசியா மற்றும் பார்ட்டி KDM ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சுயேச்சைகளின் ஆதரவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here