மலேசியாவில் ஐந்து மில்லியனைத் தாண்டியது கோவிட் தொற்று

நாட்டில்    1,502 புதிய கோவிட் -19  தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன, மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 5,000,332 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.    சுகாதாரத் துறை அமைச்சகத்தின் KKMNow தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை  1,502,  புதிய  தொற்றுகள்  பதிவாகியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை 2,093 பேர் தொற்றிலிருந்து மீண்டனர்.  தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நாட்டில் ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,941,114 ஆக உள்ளது.    தற்போது 22,505 பேர் சிகிச்சையில்  இருப்பதாகவும், 20,889  பேர் வீட்டுத் தனிமைப்படுத்தலைக் கடைப்பிடிப்பதாகவும்  தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் (ICU) உள்ள கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 104 ஆக உள்ளது, இவர்களில் 70 நோயாளிகளுக்கு  ventilation    உதவியும்  தேவைப்படுகிறது.   இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின்  தரவுக்  களஞ்சியம்       வெளியிட்ட அறிக்கையில்   மூன்று கோவிட் -19 இறப்புகள் பதிவாகியுள்ளன, இதனால் இறப்பு எண்ணிக்கை 36,652 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here