காரமான உணவு சாப்பிட்டதால் தொடர் இருமல்: பெண்ணுக்கு எலும்பு முறிவு !

சீனா, ஷாங்காய் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹுவாங். இந்தப் பெண் காரமான உணவை உண்டதால் அதிக இருமல் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் இருமலால் 4 விலா எலும்புகளில் சிறு முறிவு ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் அந்த பெண்ணுக்கு எந்தவித வலியும் தெரியாத நிலையில், அவர் மூச்சு விடும் போது வலியை உணர்ந்துள்ளார். எனவே, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரது நான்கு விலா எலும்புகள் முறிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அவரது மார்பகப் பகுதியில் ஒரு மாதத்திற்குக் கட்டுப் போட்டு ஓய்வெடுத்தால் மட்டுமே அவர் குணமடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண், 171 சென்ட்டிமீட்டர் உயரமும், 57 கிலோகிராம் எடையும் கொண்டவர். அவரது உடல் மெலிந்து விலா எலும்புகள் வெளியில் தெரியும் அளவிற்கு பலமில்லாமல் காணப்பட்டாராம். எனவேதான் அவரது உடல் இருமலையே தாங்காமல், விலா எலும்புகள் முறிய முக்கியக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here