வான்குடை சாகசத்தில் ஈடுபட்டு, இணையத்தை கலக்கும் 87 வயது மூதாட்டி

கோத்தா கினபாலு:

சாபா மாநிலம், ரானாவ் நகரில், வான்குடையூர்தியைச் (பேராகிளைடிங்) செலுத்தும் பணியில் இருக்கும் கிறிஸ் லெம்மர்ட் என்பவர், ஜூலை 17ஆம் தேதி வேலைக்குச் சென்றபோது எப்போதும்போல் இளையர்கள் கூடியிருப்பார்கள் என எதிர்பார்த்தார்.

பேராகிளைடிங்’ சாகச நடவடிக்கையில், அதனைச் செலுத்துபவரும் பயணி ஒருவரும் இருப்பர். அதனால், இளையர்களுக்குப் பதிலாக 87 வயது மூதாட்டியைக் கண்டதும் அவர் வியப்படைந்தார்.

தொங் என்று அறியப்படும் குறித்த மூதாட்டி, ஐம்பது வயது மதிக்கத்தக்க தன் மகளை ஊக்கப்படுத்துவதற்காகத் தான் முதலில் வான்குடையூர்தியில் செல்ல முன்வந்தார்.

இதன் தொடர்பில் லெம்மர்ட் தமது சமூக ஊடகப் பக்கத்தில் இரண்டு காணொளிகளை வெளியிட்டார். அவற்றைப் பற்றி இணையத்தில் கருத்து தெரிவித்த சிலர் ஆச்சரியப்பட்டனர். இருப்பினும் அவர்கள் அந்த மூதாட்டியின் துணிவைப் பாராட்டினர்.

தொங் வான்குடையூர்தியில் பறந்துகொண்டிருந்தபோது, பதற்றமின்றி இருந்ததாகத் லெம்மர்ட் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/100009535970482/videos/562228749245221/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here