கோலாலம்பூர், டிசம்பர் 10 :
அம்பாங்கின் தாமான் ஹலாமானில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று உலு லங்காட் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர், டாக்டர் அனி அஹ்மட் கூறினார்.
தற்போது பெய்து வரும் மழை மற்றும் அவர்களது வீடுகளுக்குப் பின்னால் உள்ள மேடு காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
“இதுவரை, பாதிக்கப்பட்ட இரண்டு வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும், சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு தடுப்பு சுவர்கள் இருப்பதாக அதிகாரிகளிடம் கூறுவது உட்பட பல காரணங்களால் வீடடை விட்டு வெளியேற மறுக்கின்றனர் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில்,நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவின் போது, ஒரு வயதான பெண் உட்பட ஆறு நபர்கள் எந்த காயங்களுமின்றி உயிர் தப்பினர் என்றும் எனினும் இந்த சம்பவத்தில் அவர்களது வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.